/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜய் படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி
/
விஜய் படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி
ADDED : செப் 04, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: விஜய் நடித்த கோட் திரைப்படத்திற்கு, புதுச்சேரியில் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
விஜய் நடித்து கோட் திரைப்படம் இன்று வெளியாகிறது. புதுச்சேரியின் நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் இப்படம் திரையிடப்படுகிறது. இன்று 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை அனைத்து தியேட்டர்களிலும், காலை 9:00 காட்சி உட்பட தினசரி 5 காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.