/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
/
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
ADDED : ஏப் 15, 2024 04:11 AM

புதுச்சேரி : மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் அறிவியல் சொசைட்டி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன்,செயலாளர் நாராயணசாமி,பொருளாளர் ராஜராஜன்,கல்னாாரி இயக்குனர் ராஜகோவிந்தன்,துணை இயக்குனர் காக்னே, அகடாமி டீன் கார்த்திகேயன், ஆராய்ச்சி டீன் சஞ்சய், மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ் கலந்து கொண்டனர்.
அறிவியல் சொசைட்டி செயலாளர் பிரவின் வரவேற்றார்.உதவி செயலாளர் பிரித்தி நோக்கவுரையாற்றினார்.பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் நளினி,ஹூமோபிலியாவுடன் எனது பயணம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
ஹூமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை எதிர் கொள்ளும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடி விளக்கம் அளித்தார்.மருத்துவ கல்லுாரி இயக்குனர் ராஜகோவிந்தன், அறிவியல் சொசைட்டி உதயசங்கர், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.