/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
/
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் சிறப்பு முகாம்
ADDED : பிப் 22, 2025 10:42 PM
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சியில், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி வசூல், சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சொத்து வரி, வீட்டு வரி மற்றும் சேவை வரி வசூல் சிறப்பு முகாம், கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலை பள்ளியில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
எனவே, கதிர்காமம், திலாஸ்பேட்டை, வீம கவுண்டபாளையம், இந்திரா நகர், கவுண்டன் பாளையம், வி.பி.சிங்., நகர் பகுதிகளில் உள்ளவர்கள், 2024 -25ம் ஆண்டு வரையிலான சொத்து உள்ளிட்ட வரிகளை செலுத்தலாம்.
அதே போல, தட்டாஞ்சாவடி வி.பி.சிங்., நகர் வீட்டு வரி வசூல் மையத்தில், காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பொதுமக்கள் வரிகளை செலுத்தலாம்.
மேலும், igrams.py.gov.in ஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் வரிகளை செலுத்தலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.