/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளுக்குடி கிருஷ்ணனின் சிறப்பு உபன்யாசம்
/
வேளுக்குடி கிருஷ்ணனின் சிறப்பு உபன்யாசம்
ADDED : ஆக 08, 2024 01:57 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு நடக்கும், வேளுக்குடி கிருஷ்ணனின் சிறப்பு உபன்யாசம் வரும் 10ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை, இ.சி.ஆர், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில், ராமானுஜரின், 1,008ம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, வேளுக்குடி கிருஷ்ணனின், சிறப்பு உபன்யாசம் வரும், 10ம் தேதி துவங்க உள்ளது.
நிகழ்ச்சியில், 'அஷ்டலஷ்மி மகாத்ம்யம்' எனும் தலைப்பில், உபன்யாசம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், சென்னை கிஞ்சித்காரம் அறக்கட்டளை புதுச்சேரி கிளையும் இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்த உபன்யாசம் வரும், 12ம் தேதி நிறைவு பெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு, 9443085334, 9442241408, 88256 11581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.