/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் விளையாட்டு மற்றும் கலை விழா
/
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் விளையாட்டு மற்றும் கலை விழா
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் விளையாட்டு மற்றும் கலை விழா
பாலாஜி வித்யாபீத் பல்கலையில் விளையாட்டு மற்றும் கலை விழா
ADDED : ஜூன் 22, 2024 05:02 AM

பாகூர் : ஸ்ரீ பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழகத்தில், 'கெம் கிளஷ் 2024' என்ற தலைப்பில், மருந்தியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் கலை விழா போட்டிகள் நடந்தது.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மருந் தியல் கல்லூரி, புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகார துறை, நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் பேரவை இணைந்து 'கெம் கிளஷ் 2024' என்ற தலைப்பில், விளையாட்டு மற்றும் கலை விழா போட்டிகள் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மருந்தியல் கல்லூரியின் மாணவ - மாணவர்கள் பங்கேற்று, கிரிக்கெட், வாலிபால், புட்பால், இறகுப்பந்து, கபடி, கொக்கோ, மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், பாடல், நடனம், நடிப்பு, மைம், மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட கலை விழா போட்டிகளில் மாணவ -மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் மருந்தியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சண்முகநாதன் தலைமையில் மருந்தியல் கல்லூரி மாணவர் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர் பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.