ADDED : ஜூலை 23, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
பட்டதாரி ஆசிரியர் வள்ளி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரூபஸ் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரசாத் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சம்பத்நீஸ், ரவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
