ADDED : ஜூலை 11, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், : காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு, மாணவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் கையேடுகள் வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி மோகன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் கையேடுகளை வழங்கினார்.
தொடர்ந்து, பள்ளியில் 2023- -24ம் ஆண்டு நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மொழி ஆசிரியர் ஜான் போஸ்கோ தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர் சம்பத், லோட்டஸ் பவுண்டேஷன் இயக்குனர் சமயவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர் நன்றி கூறினார்.
விழாவையொட்டி மாணவிகளின் சிலம்பம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடந்தது.