தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு


ADDED : செப் 12, 2024 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2024 02:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளி பொறுப்பாசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சிவசங்கரி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உடற்கல்வி விரிவுரையாளர் நடராஜன், தொண்டமாநத்தம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், அரிமா தமிழன் மற்றும் பள்ளியின் முதுநிலை கண்காணிப்பாளர் வரதராஜூலு ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினர்.

விரிவுரையாளர்கள் மணிகண்டன், சரவணன், தமிழாசிரியை, கலைவாணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வரலாற்று ஆசிரியர் உதயகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் விஜயலட்சுமி, யமுனா, கவிதா, இயேசுராஜா, சைமன், ஜனார்த்தனன், ஜெகன், நாயகி, அனிதாமரி, அன்புமதி, மகாதேவன், ஆறுமுகம் மற்றும் திவாகர் ஆகியோர் செய்தனர். உடற்கல்வி விரிவுரையாளர் ரகு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us