/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை தடை செய்ய வேண்டும் மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் போர்க்கொடி

ADDED : ஜூன் 18, 2024 05:06 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ், ஆறுமுகம், சதீஷ், சுப்பிரமணி, மேரி ஜெயன், அசோக் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ஊக்கத்தொகை காலம் கடத்தாமல் வழங்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
மாநில விளையாட்டு கவுன்சிலை மீண்டும் செயல்பாட்டிற்குகொண்டு வர வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக ஏற்படுத்தப்பட்ட புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். எழுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த ஒரு விளையாட்டு சங்கத்திலும் நிர்வாகிகளாக இருக்கக் கூடாது என்பது மத்திய அரசின் வழிகாட்டுதல் ஆகும்.
இந்த வழிகாட்டுதலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு நிர்வாகிகள் அன்பழகன், சதீஷ், குமார், சந்துரு, செந்தில், சுரேஷ், வெங்கடாஜலபதி, பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.