/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி துவக்கி வைப்பு
/
விளையாட்டு போட்டி துவக்கி வைப்பு
ADDED : ஆக 01, 2024 06:18 AM

நெட்டப்பாக்கம்: கோ மக்கள் நல இயக்கம் சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி பண்டசோழநல்லுார் கிராமத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு இயக்கத் தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ பங்கேற்று, கிரிக்கெட், கபடி, வாலிபால் விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
தொடர்ந்து நடந்து கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் எழில்வேந்தன், சமூக ஆர்வலர் சந்திரமோகன், கிராம முக்கியஸ்தர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நல இயக்கம் செயலாளர் ஞானமணி நன்றி கூறினார்.