ADDED : ஏப் 28, 2024 04:49 AM
புதுச்சேரி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து விளையாட்டு வீரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு,பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அன்பு நிலவன், மாநில நிர்வாகிகள் செந்தில்வேல், குமார் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர்கராத்தே வளவன் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் திரளான விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில், பாகூர் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த அரசு அதிக நிதி ஒதுக்கி, விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். பாகூர் பகுதியில் பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
