தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஆர்.கே., பள்ளி பிளஸ் 2வில் சாதனை

எஸ்.ஆர்.கே., பள்ளி பிளஸ் 2வில் சாதனை

எஸ்.ஆர்.கே., பள்ளி பிளஸ் 2வில் சாதனை


ADDED : மே 19, 2024 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 04:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே. மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் தேர்வு எழுதிய 53 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி புவனேஸ்வரி 560 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி செல்வநாயகி 543 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ஜான்சி 528 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

தமிழ் பாடத்தில் மாநில அளவில் இப்பள்ளி முதல் மதிப்பெண் பெற்றுள்ளது. 500க்கு மேல் 9 பேரும், 450க்கு மேல் 21 பேரும், 400க்கு மேல் 34 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியாக தமிழ் 99, ஆங்கிலம் 90, கணிதம் 94, இயற்பியல் 90, வேதியியல் 92, எக்கனாமிக்ஸ் 98, காமர்ஸ் 97, அக்கவுடன்சி 95, கம்பியூட்டர் சயின்ஸ் 95, கம்பியூட்டர் அப்பிளிகேஷனில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் மகேந்திரன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். அவர் கூறுகையில், 'நமது பள்ளி நகர்புற மேல்நிலைப் பள்ளிக்கு இணையாக சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகிறது.

பள்ளியின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை அட்மிஷன் செய்யப்படும் மாணவர்களுக்கு மூன்று செட் பள்ளி சீருடைகள், இரண்டு செட் ஷூக்கள் மற்றும் 50 சதவீதம் கல்வி கட்டண சலுகை அளிக்கப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us