/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., வேட்பாளருக்கு ஸ்டாலின் வாழ்த்து
/
காங்., வேட்பாளருக்கு ஸ்டாலின் வாழ்த்து
ADDED : மார் 23, 2024 11:29 PM

புதுச்சேரி: புதுச்சேரி தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை, திருச்சி தேர்தல் பரப்புரை பயணத்தில் நேற்று, சந்தித்தார். இந்த தேர்தலில் வைத்திலிங்கம், அதிக ஓட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காரைக்கால் மாவட்ட செயலாளர் நாஜிம், அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், நாக தியாகராஜன், தொகுதி செயலாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

