/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் தொகுதியில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
/
வில்லியனுார் தொகுதியில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ADDED : மார் 03, 2025 04:48 AM

வில்லியனுார் : வில்லியனுார் தொகுதியில் தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிவா எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழா, வில்லியனுார் தொகுதி தி.மு.க., சார்பில், பல்வேறு இடங்களில் இனிப்பு, அன்னதானம் மற்றும் கட்சிகொடியேற்றி கொண்டாடினர். வில்லியனுார் அண்ணா சிலை பகுதியில், கட்சியினர் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். சிவா எம்.எல்.ஏ., கட்சி கொடி ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன்,தர்மராஜ், தொகுதி செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் குலசேகர், ரமணன், சபரி, சுப்ரமணி, கார்த்தி, மிலிட்டரி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.