/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்டேட் பாங்க் வீட்டு கடன் திருவிழா விழிப்புணர்வு வாகன பிரசாரம்
/
ஸ்டேட் பாங்க் வீட்டு கடன் திருவிழா விழிப்புணர்வு வாகன பிரசாரம்
ஸ்டேட் பாங்க் வீட்டு கடன் திருவிழா விழிப்புணர்வு வாகன பிரசாரம்
ஸ்டேட் பாங்க் வீட்டு கடன் திருவிழா விழிப்புணர்வு வாகன பிரசாரம்
ADDED : ஜூன் 22, 2024 04:59 AM

புதுச்சேரி புதுச்சேரி ஸ்டேட் பாங்க் சார்பில் வீட்டு கடன் திருவிழா விளம்பர வாகனத்தை மண்டல மேலாளர் சதீஷ் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி ஸ்டேட் பாங்க் சார்பில் வீட்டு கடன் திருவிழா விளம்பர வாகனத்தை புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ் பாபு நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி தலைமை கிளை பொது மேலாளர் அன்பு மலர், வீட்டுக் கடன் மைய உதவி பொது மேலாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.
மேலும், புதுச்சேரி, கடலுார் மற்றும் பெரம்பலுார் ஆகிய இடங்களில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளைகளில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை வீட்டு கடன் திருவிழா நடக்கிறது. அதையொட்டி, விளம்பர வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரி தெரிவித்துள்ளனர்.