ADDED : மே 18, 2026 06:20 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து மாநில அமைப்பாளர் சிவா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநில தி.மு.க செயற்குழுக் கூட்டம் நாளை மாலை 4.00 மணி அளவில் புதுச்சேரி சித்தன்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில், தேர்தல் பொறுப்பாளர், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாநில கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
