/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநிலத்தில் ஐ.டி., பூங்கா நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
/
மாநிலத்தில் ஐ.டி., பூங்கா நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
மாநிலத்தில் ஐ.டி., பூங்கா நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
மாநிலத்தில் ஐ.டி., பூங்கா நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 05:32 AM
புதுச்சேரி : மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்காமல் மத்திய குழு கூட்டம் நடக்கிறது என, நேரு எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசினார்.
பட்ஜெட் உரை குறித்த விவாதத்தில் அவர் பேசியதாவது:
மத்திய அரசு விஷன்-2047 திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால் புதுச்சேரியில் மத்திய குழு வந்தபோது சம்பிரதாய நிகழ்வாக நடந்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட தெரிவிக்கவில்லை. ஏன் முதல்வருக்கு கூட தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தல் நேரத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் மற்ற காலங்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்தபோதும், இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன. அடக்க உத்தரவினை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் தான் தருகின்றன. இந்த இறப்பு சான்ழிதழ்களை கொண்டு இறந்தவர்கள் பட்டியலை நீக்க வேண்டும்.
மாநிலத்தில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லாததால் அந்த கல்வி அவர்களுக்கு பயனற்றதாக மாறி விடுகிறது. வெளியூர்களில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்கின்றனர். மாநிலத்தில் ஐ.டி., பூங்கா விரைவில் துவங்க வேண்டும்' என்றார்.