ADDED : ஆக 01, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நியூ பெத்தாங் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி சார்பில், 11வது மாநில அளவிலான பெத்தாங்க் விளையாட்டுப் போட்டி நடந்தது.
புதுச்சேரியில் உப்பளம் துறைமுக வளாகத்தில் நடந்த போட்டியை, சிறப்பு விருந்தினர்கள் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், நாராயணசாமி எம்.எல்.ஏ., பா.ஜ., செயற்குழு உறுப்பினர் அங்கு தாஸ், கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், நியூ பெத்தாங் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி பெத்தாங்க் விளையாட்டின் வளர்ச்சிக்கும், வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், விளையாட்டு ஒற்றுமையை மேம்படுத்தவும் நடத்தப்படுகிறது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற தரமான போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும் என, நியூ பெத்தாங்க் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி தெரிவித்துள்ளது.
