ADDED : பிப் 27, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் சிலம்ப கலைக் கழகம் இணைந்து, மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், வெற்றிப் பெற்றி அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கவுரவித்தனர்.
முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில், நடந்த போட்டியில், புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா  நடந்தது.
வீர பாண்டிய கட்டபொம்மன் சிலாம்பாட்ட குழு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக, பங்கேற்ற, முன்னாள் முதல்வர் நாராயணசாமி,  வேலன் வீர விளையாட்டு, கழகத்திற்கு சாம்பியன் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அரசு கொறடா, அனந்தராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

