/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில உரிமைகள் பறிப்பு தினம் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆவேசம்
/
மாநில உரிமைகள் பறிப்பு தினம் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆவேசம்
மாநில உரிமைகள் பறிப்பு தினம் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆவேசம்
மாநில உரிமைகள் பறிப்பு தினம் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆவேசம்
ADDED : ஆக 15, 2024 05:05 AM
புதுச்சேரி: சட்டசபையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தனி நபர் தீர்மானம் கொண்டு வந்த செந்தில் குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரி இந்தியாவுடன் இணையும்போது பிரெஞ்சு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், புதுச்சேரி அரசின் செலவினங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை மத்திய அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படிதான் 1954ல் தொடங்கி, 1987ம் ஆண்டு வரை புதுச்சேரிக்கு மத்திய அரசு 48 முதல் 50 சதவீதம் வரை நிதி அளித்து வந்தது. அதன்பிறகு நிதி படிப் படியாக குறைய தொடங்கியது.
புதுவை அரசு நேரடியாக கடன் பெறலாம் என,மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் நிர்வாக செலவுக்காக கடன்பெற்று அதற்கு வட்டி செலுத்தும் நிலை ஏற்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரத்து 266 கோடி தான் மத்திய அரசு நிதியாக கிடைத்துள்ளது.
இது 26 சதவீதம் தான், 2016 தொடங்கி 2021 வரை 18 சதவீதம் தான் மத்திய அரசு நிதி கிடைத்தது.
தற்போது 10 சதவீதம் கூடுதலாக பெறுகிறோம்.
சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பட்ஜெட்டில் 35 சதவீதம் செலவிடப்படுகிறது. இதற்கு மத்திய அரசு நிதி அளித்தால் ரூ.4 ஆயிரத்து 500 கோடி தர வேண்டும். இதில் கூட 1,250 கோடி ரூபாய் குறைவாக உள்ளது.
புதுச்சேரிக்கு மத்திய அரசு அதிகாரத்தை தர மறுத்து யூனியன் பிரதேசமாகவே நீடிக்கிறது.
எனவே, பிரெஞ்சு இந்திய ஒப்பந்தப்படி நிதி பற்றாக்குறை முழுதுமாக கொடுக்க வேண்டும்.
மாநில அந்தஸ்துக்கு ஒரு கமிட்டி அமைத்து பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை மாநில உரிமை பறிப்பு தினத்தை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.