/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பங்களிப்புடன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை; முதல்வர்
/
தனியார் பங்களிப்புடன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை; முதல்வர்
தனியார் பங்களிப்புடன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை; முதல்வர்
தனியார் பங்களிப்புடன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை; முதல்வர்
ADDED : மார் 04, 2025 04:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு, கூட்டு றவுத் துறையில் தேர்வு செய்யப்பட்ட இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் பணியிடங்களுக்கு பணி ஆணையினை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
மாகேயில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல் படுகின்றன. பாண்லே ஐஸ்கிரீமுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இரு புதிய ஐஸ்கிரீம்களை அறிமுகம் செய்துள்ளோம். நான், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, இத்துறையில் வேகமான வளர்ச்சியை கொண்டு வந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்க முயன்றோம். ஆனால் தற்போது 31 பணியிடங்களை நிரப்ப நான்கு ஆண்டுகளாகின்றன. அரசு வேலைக்கான கோப்பு தலைமைச்செயலகம் சென்றால் என்னவாகும் என்பது இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியும்.
கூட்டுறவுத்துறைக்கு கடன் தந்து நலிவடையும்போது, வங்கியும் நஷ்டமடைகிறது. கூட்டுறவு நிறுவனங்களின் பணியை அரசு பணியாக நினைக்காமல் சொந்த நிறுவனமாக நினைத்து முயன்றால் தான், லாபம் வரும். அதைக் கொண்டே சம்பளம், போனஸ் தரப்படுகிறது.
கூட்டுறவு நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி அடைவது அவசியம்.
இதில் பணியாற்றுவோர் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும். லாபம் இருந்தால் தான் பணிநிரந்தரம் செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பாண்லே கூட்டுறவு நிறுவனம் நன்றாக இருந்தும், பால் உற்பத்தி இல்லை. தனியார் பங்களிப்புடன் கூட் டுறவு சர்க்கரை ஆலையை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவில் திறக்கப்படும் கூட்டுறவு நுாற்பாலையை என்ன செய்யலாம் என யோசிக்கிறோம். ரேஷனில் அரிசியுடன் அத்தியாவசிய பொருள்களும் தரப்படும்' என்றார்.