/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

ADDED : மே 23, 2024 05:37 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், இறைச்சி கடைகளில் ஏற்படும் குப்பைகளை பிரதான சாலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை குப்பை வண்டிகளில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சேகரிக்கும் குப்பை வண்டி வந்தவுடன் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறி பொதுமக்கள், வியாபரிகள் பிரதான சாலைகள், பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அதிகப்படியான அபராதம் தொகை விதிப்பதோடு, வணிகம் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.