/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை செயல் அலுவலரை மாற்றக்கோரி போராட்டம்
/
தலைமை செயல் அலுவலரை மாற்றக்கோரி போராட்டம்
ADDED : ஆக 07, 2024 05:23 AM
புதுச்சேரி : கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலரை மாற்ற வலியுறுத்தி, ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் கூட்டு போராட்டக்குழு கூறியதாவது:
புதுச்சேரி கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் சேவை நோக்கத்தோடு, கிராமப்பற ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த வாரியம் பாரதப் பிரதமரின் கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை, செயல்படுத்தும் ஒரு அங்கமாக இந்தியா முழுதும் செயல்பட்டு வருகிறது.
அதேபோல, புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் நிலையில், கதர் வாரியத்தினை மூடும் விதமாக தலைமை செயல் அலுவலர் செயல்பட்டு வருகிறார்.
அவரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசு மேற்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தி வாரிய ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் கடந்த, 5 நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கதர் வாரிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றனர்.