/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் புதுச்சேரி பல்கலை விளக்கம்
/
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் புதுச்சேரி பல்கலை விளக்கம்
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் புதுச்சேரி பல்கலை விளக்கம்
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் புதுச்சேரி பல்கலை விளக்கம்
ADDED : ஏப் 30, 2024 05:15 AM
புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விண்ணப்ப வரவேற்பு இன்றுடன் முடியவில்லை என புதுச்சேரி பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கு கடைசி தேதி இன்று 30 ம்தேதி என சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. பல்கலைக்கழக இணையதளத்தில், புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு கியூட் ஸ்கோர் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். அதற்கான விண்ணப்பம் விரைவில் வரவேற்கப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழக இணைய முகப்பு பக்கத்தில் கூட முதுநிலை படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பம் பெறப்படும் என்ற அறிவிப்பு பளிச்சிடுகிறது. எனவே, பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப வரவேற்பு இன்று 30ம் தேதி நிறைவு பெறவில்லை. அதிகாரபூர்வமான தகவல்களுக்கு மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் www.pondiuni.edu.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

