தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்ரீமுஷ்ணம் பள்ளியில் சுவர் ஏறி குதித்த மாணவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பள்ளியில் சுவர் ஏறி குதித்த மாணவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பள்ளியில் சுவர் ஏறி குதித்த மாணவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்


ADDED : ஆக 08, 2026 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பள்ளியில் சிறப்பு வகுப்பை புறக்கணிக்க சுவர் ஏறி குதித்த 10ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் திருப்பானாழ்வார் தெருவை சேர்ந்தவர் கவிதா. கணவரை இழந்தவர். இவரது மகன் விஷ்ணு, 14; ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலைபள்ளியில்சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. மாணவர் விஷ்ணு, சிறப்பு வகுப்பை புறக்கணிக்க பள்ளியின் பின்புறம் உள்ள மதிற்சுவர் ஏறி குதித்துள்ளார். அப்போது, முகத்தில் அடிபட்டு விஷ்ணு பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்த விஷ்ணுவை ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு விஷ்ணுவின் உடல் ஸ்ரீமுஷ்ணத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, மாணவர் விஷ்ணு சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சிதம்பரம் சாலையில் சாலை மறியல் செய்ய கூடினர். தகவலறிந்து வந்த சேத்தியாதோப்பு டி.எஸ்.பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேசி சமாதானம் செய்தனர். அதைடுத்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us