மாணவர்கள் போராட்டம் வெளிநாட்டு சதி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு
மாணவர்கள் போராட்டம் வெளிநாட்டு சதி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 24, 2026 11:13 PM
புதுச்சேரி: நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிரான போராட்டம் உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சதியாக இருக்கலாம் என, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டி தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
டில்லி ஜந்தர்மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நடக்கும் போராட்டம், உலகளவில், நம்நாட்டின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் சதியாக இருக்கலாம். உலகளவில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக நாம் உள்ளோம். இதனால், போராட்டத்தில் வெளிநாட்டு சதி இருக்க நிறைய வாய்ப்புள்ளது.
இலங்கை , நேபாளம், வங்க தேசத்தை போல, இங்கு இளம் தலைமுறையினர் போராட நிறைய வாய்ப்புகள் உள்ளது. இந்த விஷயத்தில், தீவிர யோசனைக்குப் பின் முடிவு எடுக்க வேண்டும். போலீசாருக்கு நிறைய மன அழுத்தம் உள்ளது. நிறைய அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதற்காக உள்துறை அமைச்சரை ராஜிநாமா செய்யனும்னு கூற முடியுமா. யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட படிப்புகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் அதில் தங்கள் திறமையை காட்டி சாதிக்கின்றனர். இதை அரசியல் படுத்துவது நியாயம் இல்லை.
வெளிநாட்டில் இருந்து வந்த ஒருத்தர், ஆரம்பித்த கரப்பான் பூச்சி கட்சி பெயரில், நீட்டிற்காக போராடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜல்லிகட்டு போராட்டத்தில், அரசியல் கட்சிகளின் பின்னணி இல்லை. ஜல்லிகட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை விட இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறைவு.
அவர்களுக்கு உணவு சரியாக அனுப்படுகிறது. மாணவர்களின் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்க வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் மாணவர்கள் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.
