/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செஸ் போட்டியில் மாணவர்கள் சாதனை
/
செஸ் போட்டியில் மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 26, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலை பள்ளியில், ஹிந்துஸ்தான் ரெகார்டஸ் ஆராய்ச்சி பவுண்டேஷன் சார்பில், உலக சாதனைக்கான செஸ் போட்டி நடந்தது.
போட்டியினை பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
அவர் கூறுகையில், இப்போட்டியில் பயன்படுத்தும் உலகின் மிக சிறிய செஸ் போர்டு, 2 செ.மீ அண்ட் காயின்ஸ் 2 மி.மி., கொண்டது. இதில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, தொடர் கவனத்திறன், தொலை நோக்கு சிந்தனை, திட்டமிடல், நினைவாற்றல் திறன் மேம்படும்' என்றார். தொடர்ந்து நடந்த போட்டிகளில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.