/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
இந்திய அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 23, 2024 06:33 AM
புதுச்சேரி: இந்திய அஞ்சல் துறையின் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா திட்டத்தில் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து புதுச்சேரி கோட்டம் அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்கத் தொகை திட்டத்தை இந்திய அஞ்சல் துறை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் மாதம் 500 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை பெறலாம்.
ஸ்பர்ஷ் விண்ணப்பத்தை www.tamilnadupost.nic.in என்ற இணையதளத் தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் நல்ல கல்வி தகுதி, தபால் தலை சேகரிப்பினை பொழுது போக்காக கொண்ட மாணவர்கள் இந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்படிவங்களை கொண்டு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தற்போதைய நிகழ்வுகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம், புவியியல், தபால் தலை சேகரிப்பு ஆகிய தலைப்பின் கீழ் கேட்கப்படும் வினாடி வினா எழுதும் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
இந்த போட்டியில் தகுதி பெறும் மாணவர்கள் முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற அலுவகத்தால் கொடுக்கப்படும் தலைப்பின் கீழ் தபால் தலை திட்டத்தை அதிகபட்சம் 16 தபால் தலைகள் மற்றும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தபால் தலை திட்டத்தில் வெற்றிப் பெறும் மாணவர்கள் அவர்கள் தங்கள் பெற்றோருடன் வைத்திருக்கும் அஞ்சலக சேமிப்பு கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக செலுத்தப்படும்.
விண்ணப்பங்களை அடுத்த மாதம் 6ம் தேதிக்குள் அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், புதுச்சேரி கோட்டம், புதுச்சேரி - 605001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.