ADDED : ஜூலை 12, 2024 10:59 PM

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தின விழா நடந்தது.
ஆசிரியை ரேணு வரவேற்றார். தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம், முன்னாள் ராணுவ அதிகாரி ஆளவந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாதானுார் கிராம நிர்வாக அலுவலர் அசோகன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் பாலகுமார் மாணவர் தின சிறப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
மாணவர் தினத்தை முன்னிட்டு காமராஜர் குறித்து மாணவர்களுக்கு பேச்சு, நாடகம், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குமுதா, வேலவன், ஓம்சாந்தி, மலர்க்கொடி, சுஜாதா, குப்புசாமி, மகேஸ்வரி, தையல்நாயகி ஆகியோர் செய்திருந்தனர்.