ADDED : ஜூலை 11, 2026 08:12 PM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி, சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி, சாரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், புதுச்சேரி சமுதாய நலப்பணித்திட்டத்தின் வழிகாட்டுதலின் படி அரியாங்குப்பம் அடுத்த அரிக்கமேடு தொல்லியல் அகழாய்வுப் பகுதிக்குக் களப்பயணம் மேற்கொண்டனர்.
களப்பயணத்திற்கு நலப்பணித் திட்டத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்மாமணி வேல்முருகன் கலந்துகொண்டு அரிக்கன்மேடு தொல்லியல் அகழாய்வு குறித்து கருத்துரையாற்றினார். மையம் அறக்கட்டளை பாலகங்காதரன் வாழ்த்தி பேசினார். முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமம் யுனிவர்சல் ஈகோ பவுண்டேசன் பூபேஷ் குப்தா ‘அலையாத்திக் காடுகள்’ குறித்துக் கருத்துரையாற்றினார்.
களப்பயணத்தில், ஆசிரியர்கள் சங்கரதேவி, ரேவதி, வெரொனேஸ் விஜயலட்சுமி, ஸ்ரீஜா, கீதா, சரவணராஜா, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
