/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் அமைக்க மாணவர் பெற்றோர் சங்கம் கோரிக்கை
/
பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் அமைக்க மாணவர் பெற்றோர் சங்கம் கோரிக்கை
பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் அமைக்க மாணவர் பெற்றோர் சங்கம் கோரிக்கை
பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் அமைக்க மாணவர் பெற்றோர் சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 05:26 AM
புதுச்சேரி : புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழைய மேம்பால படிக்கட்டை அகற்றி பஸ் நிலையத்திற்கு பெரிய அளவில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலச் சங்கம் தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கவர்னர், முதல்வரிடம் அளித்துள்ள மனு;
புதுச்சேரி நகரப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்திற்கு நுழைவு வாயில் அமைக்க பழைய மேம்பால படிக்கட்டுகள் தடையாக உள்ளது. ஆகையால் பழயை மேம்பாலத்தின் படிகட்டுகளை அகற்றி, பஸ்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பராமரிப்பு இன்றியும், சமூக விரோத செயலுக்கு கூடாரமாக செயல்படும் மேம்பாலத்தை திருத்தி அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் படிக்கட்டுகளை வெளிப்புறம் உள்ள மறைமலைஅடிகள் சாலையில் அமைக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கழிவறை வசதி, கடைகள், உணவகம், பஸ் நிறுத்தம் வசதி.
நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டும் அறை, உள்ளிருப்பு காவல்துறை, தபால்துறை, ஏ.டி.எ.ம்., வசதி, குடிநீர் வசதி, பயணியர் இருக்கைகள் மற்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு எடுப்பதற்கு தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். வெளி மாநிலத்திற்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு தனி நிறுத்தம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.