/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்பையா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நலவாழ்வு சங்கத்தினர் கோரிக்கை
/
சுப்பையா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நலவாழ்வு சங்கத்தினர் கோரிக்கை
சுப்பையா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நலவாழ்வு சங்கத்தினர் கோரிக்கை
சுப்பையா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நலவாழ்வு சங்கத்தினர் கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2024 05:55 AM

புதுச்சேரி, : ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு உயர்நிலைப் பள்ளியை, பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மாற்றக்கோரி நலவாழ்வு சங்கத்தினர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.
ரெட்டியார்பாளையம் சுப்பையா அரசு உயர்நிலைப்பள்ளி 150 ஆண்டுகள் கடந்து இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, உயர்நிலைப் பள்ளியாக இரு பாலரும் கற்கும் பள்ளியாக இருந்து வருகிறது.
இந்த பள்ளியை பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட நல வாழ்வு சங்கங்கத்தினர் நேற்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தினை சந்தித்து மனு அளித்தனர்.
இந்திய கம்யூ., பிரதிநிதிகள், பல்வேறு சமூக அமைப்பினர் உடனிருந்தனர்.