/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளாஸ்டிக் பொருள் மறுசுழற்சி தொழிற்சாலை நிறுவ மானியம்
/
பிளாஸ்டிக் பொருள் மறுசுழற்சி தொழிற்சாலை நிறுவ மானியம்
பிளாஸ்டிக் பொருள் மறுசுழற்சி தொழிற்சாலை நிறுவ மானியம்
பிளாஸ்டிக் பொருள் மறுசுழற்சி தொழிற்சாலை நிறுவ மானியம்
ADDED : டிச 07, 2024 07:02 AM
புதுச்சேரி: மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை நிறுவ மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மானியம் வழங்குகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
கடலோரப் பகுதிகளில் கிடக்கும் உபயோகமில்லாத கிழிந்த மீன்பிடி வலைகள் மற்றும் பிற பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை நிறுவ, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
கடலோரங்களில் கிடக்கும் பழைய கிழிந்த வலைகள், அங்குவரும் நண்டு, ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அத்தகைய பொருட்களை அறிவியல் முறைப்படி மறுசுழற்சி செய்ய நிறுவப்படும், தொழிற்சாலைகளுக்கு 40 சதவீதம் மானியமாக 24 லட்சம் ரூபாய் அளிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முன்வந்துள்ளது.
இதற்கான கருத்தரங்கம் வரும் 11ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் நடக்கிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.