/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைகளுக்கு மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு
/
ரேஷன் கடைகளுக்கு மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு
ADDED : மார் 13, 2025 06:46 AM
பட்ஜெட்டில் கூட்டுறவு துறை குறித்த அறிவிப்புகள்;
துவக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சுய உதவிக் குழுவினருக்கு 75 சதவீத்தில மானியத்தில் கறவை மாடுகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைக்கும் பொருட்டு, துவக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள சங்கம் மூலம் 75 சதவீத மானியத்தில் சைலேஜ் வழங்கப்படும்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து ரூ.34.35 கோடி மதிப்பில் பாண்லே நிறுவனத்தில் 20 டி.எல்.பி.டி., திறன் கொண்ட ஐஸ்கிரீம் தயாரிக்கும் பிரிவு துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் பண்லே நிறுவனத்தில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பால் குளிரூட்டும் சாதனம் நிறுவவும், பால் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பாண்டெக்ஸ், பாண்பேப், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 4.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி கூட்டுறவு நுாற்பாலை வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாட்டிற்காக, 5 கோடி நிதி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் செயல்படும் 484 ரேஷன் கடைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் மானியம் ரூ.90 ஆயிரம் ரூ.1.75 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்குவதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.