/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
/
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
ADDED : மே 11, 2024 04:52 AM

பாகூர்: பாகூர் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகள் ஜெ.சி.பி., மூலமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
பாகூரில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று காலை பாகூர் கடை வீதி மற்றும் ஏரிக்கரை வீதியில் சாலை ஆக்கிரமிப்புகளை, பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று குடிசை வீடுகள் அகற்றப்பட்டது. இப்பணியை சப் கலெக்டர் சோம சேகர் அப்பராவ் கோட்டாரு பார்வையிட்டார்.
அப்போது, வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தரப்பில் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி விடுவதாகவும், அதற்கு கால அவகாசம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து திரும்பி சென்றனர். பாகூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியால் பரபரப்பு ஏற்பட்டது.