/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம
/
கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம
ADDED : ஜூலை 24, 2024 06:35 AM

புதுச்சேரி : புதுச்சேரி கரும்பு விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அலுவலகத்தில் நடந்தது.
இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கரும்பு விவசாய சங்க தலைவர் முருகையன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயராமன், செயலாளர் ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ரவி உட்பட அரியூர் கரும்பு விவசாயி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், லிங்கா ரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து இரண்டு ஆண்டு ஆகிறது.
அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யாததால் விவசாயிகள் புதிய கடனை வாங்க முடியாத நிலை உள்ளது.
கரும்பு விவசாய சங்க குறைதீர்வு கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்த ஆலோசிக்கப்பட்டது.