/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
/
வில்லியனுாரில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
வில்லியனுாரில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
வில்லியனுாரில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
ADDED : ஜூலை 01, 2024 06:26 AM
புதுச்சேரி : வில்லியனுாரில் ஆன்லைனில் பணத்தை இழந்த வாலிபர், கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த், 30. இவரது மனைவி வாணி. ஒரு வயது அண் குழந்தை உள்ளது. வில்லியனுார் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த விஜயகாந்த், தனது நண்பர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் பலரிடம் கடன் பெற்று, அதனையும் ஆன்லைனில் இழந்து உள்ளார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளான விஜயகாந்த், நேற்று முன்தினம், மனைவி வாணி மற்றும் குழந்தையுடன் ஊசுட்டேரி பூங்காவிற்கு சென்றார்.
தற்கொலை செய்ய முடிவு செய்து, அங்கு, குடும்பத்துடன் எலி மருந்து சாப்பிட்டார். பின், அங்கிருந்து பைக்கில் புதுச்சேரி நோக்கி வந்தபோது, மேட்டுப்பாளையம் பகுதியில் திடீரென மூன்று பேரும் மயங்கி விழுந்தனர்.
அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தற்கொலைக்கு முயன்ற விஜயகாந்த் சட்டை பையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், தனது சாவிற்கு எம்.எம். குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் காரணம் எனவும், கடனுக்காக தான் நண்பரிடம் இருந்து வாங்கி கொடுத்த பத்திர ஆவணத்தை பெற்றுக் கொண்டு, பணம் ஏதுவும் தராமல் ஏமாற்றினார். பத்திரத்தை திரும்ப கேட்டதற்கு, ரூ. 5 லட்சம் கேட்டு தொல்லை தருவதாக எழுதி இருந்தது.