/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை
/
புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை
புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை
புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை
ADDED : ஏப் 27, 2024 04:30 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரையில் எந்த நேரமும், சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்திருக்கும். ஆனால், கடும் வெயில் வாட்டி வதைப்பதால், பகல் வேளையில், கடற்கரை சாலையே வெறிச் சோடி காணப்படுகிறது. வெளியூர், மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும், சுற்றுலா பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.
புதுச்சேரியை பொருத்தவரை நடப்பு கல்வியாண்டு முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., விதிகளின் படி, முழு ஆண்டு தேர்வு முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, நடந்து வருகிறது. வரும், மே 1ம் தேதி முதல் ஜூன் வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 29 மற்றும் 30ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முதல், அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், வரும், ஜூன், 6ம் தேதி பள்ளி கள் திறக்கப்பட உள்ளன.

