/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம்
/
சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம்
ADDED : மார் 03, 2025 04:51 AM

புதுச்சேரி : ஏ.ஐ.டி.யு.சி., சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பாபு, கார்த்திகேயன், தயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி., அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், அந்தோணி, துரைசெல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இதில், துணை தலைவர்கள் இக்பால், டோனி, முகமது அலி, சங்கர், துணை செயலாளர்கள் சரவணன், சிலம்பரசன், நாகராஜ், பழனிவேல், அருள்ராஜ், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் வாரத்தின் இறுதி நாள் நடக்கும், சண்டே மார்க்கெட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, சண்டே மார்க்கெட் சாலையில், அன்றைய தினம் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். குற்றச்சம்பவங்களை தடுத்திட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட வேண்டும்.
சமூக விரோதிகளால், வியாபாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க, போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும், சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்துதர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.