/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை
/
அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை
ADDED : ஜூலை 11, 2024 04:32 AM
புதுச்சேரி : அரசு மருத்துவமனையில் இதுவரை 448 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என, கண்காணிப்பாளர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையம், சென்னை பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனை இடையே ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இருதய அறுவை சிகிச்சை கடந்த 2015ம் ஆண்டு முதல்வர் ரங்கசாமியால் துவக்கப்பட்டது.
இதன் மூலம், மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. இதுவரை 448 பேர் இருதய அறுவை சிகிச்சை மூலம் பயனடைந்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.
மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் செலுத்தி இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம்.
தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மூன்று மடங்கு அதிக செலவில் செய்யப்படுகிறது.
இம்மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை பேஸ்மேக்கர் கருவி பொருத்தல், இருதய ஓட்டை சரி செய்தல் போன்ற அனைத்துவிதமான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இந்த சலுகையை இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் புதுச்சேரி மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.