தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இண்டியா கூட்டணிக்கு ஆதரவு

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இண்டியா கூட்டணிக்கு ஆதரவு

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இண்டியா கூட்டணிக்கு ஆதரவு


ADDED : ஏப் 03, 2024 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில செயலாளர் விஜயா, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்க சரளா, மகிளா காங்., மாநில தலைவி பஞ்சகாந்தி ஆகியோர் கூட்டாக கூறியதாவது;

பெண்கள் அமைப்புகள் இணைந்து அனைத்து பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் புதுச்சேரியில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து, அரிசி அத்தியவசிய பொருட்கள் வழங்கிட வேண்டும். சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

புதுச்சேரியில் செயல்படாமல் கிடக்கும் மகளிர் ஆணையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கஞ்சா போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். பெண்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். புதுச்சேரியில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 164 வழக்குகள் பதிவாகி உள்ளது. இத்தகைய குற்றங்கள் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த இண்டியா கூட்டணிக்கு பெண்கள் அமைப்புகள் ஆதரவு அளிக்கிறோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us