/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா 'அட்வைஸ்'
/
அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா 'அட்வைஸ்'
அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா 'அட்வைஸ்'
அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா 'அட்வைஸ்'
ADDED : ஆக 07, 2024 05:31 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பஸ் உரிமையாளர் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம், காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது.
ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி முன்னிலை வகித்தார். எஸ்.பி.,க்கள் மோகன்குமார், செல்வம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுரேஷ்பாபு மற்றும் போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, பி.ஆர்.டி.சி., - எஸ்.இ.டி.சி., அதிகாரிகள் மற்றும் தனியார் பஸ் சங்க உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'புதுச்சேரியில் பெரும்பாலான சாலையோரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சாலைகளில் பஸ்கள் சென்று வர சிரமம் இருப்பதால், அதனை சரிசெய்ய வேண்டும். சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். புதுச்சேரி - கடலுார், புதுச்சேரி - விழுப்புரம் செல்லும் பஸ்களின் கால அட்டவணை கடந்த 1990-ல் போடப்பட்டது. இந்த கால அட்டவணைப்படி நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே இந்த நேரத்தை மாற்றியமைத்து தர வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா பேசுகையில், 'தங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் கேட்கட்பட்டுள்ளது. இவற்றில் எந்தளவுக்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக செல்கின்றன. அவ்வாறு பஸ்களை இயக்கக்கூடாது.
டிரைவர்கள் மொபைல் போன் பேசியபடி பஸ் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஏர் ஹாரன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்க கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்' என்றார்.