/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை பணிகள் தலைமை பொறியாளர் ஆய்வு
/
பொதுப்பணித்துறை பணிகள் தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : மே 26, 2024 05:06 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து வரும் பொதுப்பணித்துறை பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க, தலைமை பொறியாளர் தீனதயாளன், அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி லெனின் வீதியில் வாய்க்கால் பணிகளில் இடையூறாக உள்ள மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. அதேபோல, முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், நேற்று ஆய்வு செய்து, விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும், உழந்தை மற்றும் வேல்ராம்பட்டு ஏரிகளைப் பார்வையிட்டு, ஏரிக்கரை சாலைகளை விரிவுபடுத்தி அமைக்கவும், நடேசன் நகர், அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பணிகளைப் பார்வையிட்டு, விரைந்து பணிகளை முடிக்கவும், சாலை ஓரத் தில் தடுப்பு கட்டைகள் அமைக்கவும் வலியுறுத்தினார். அதே போல அரியாங்குப்பம் ஆற்றங்கரையில் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, என்.ஆர்.நகர் ஓரத்தில் கரையினை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் காலாப்பட்டு, அசோக் ஓட்டல் பகுதியில் கடற்கரையில் அமைய உள்ள, மீன் இறங்கு தளம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வில், அவருடன் செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியன் சுந்தரமூர்த்தி, சுந்தரராஜ், சந்திரக் குமார், உமாபதி மற்றும் வாசு உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.