நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: செம்படப்பேட்டை அங்காள்ளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு 8.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.
இரவு 8.00 மணிக்கு கேரள இசையுடன் ஊஞ்சல் உற்சவமும், அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.