/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டா மாற்ற புகாரில் சிக்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
/
பட்டா மாற்ற புகாரில் சிக்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
பட்டா மாற்ற புகாரில் சிக்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
பட்டா மாற்ற புகாரில் சிக்கிய தாசில்தார் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 05, 2024 06:39 AM
புதுச்சேரி : பட்டா மாற்ற புகாரில் சிக்கிய தாசில்தார் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி தெற்கு சப் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவு தாசில்தாராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அதிரடியாக தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர், புதுச்சேரியில் செண்டில்மெண்ட்-1 தாசில்தாராக பணியாற்றியபோது பட்டா மாற்ற புகாரில் சிக்கினார்.குறிப்பாக வில்லியனுார் பகுதியில் ஒருவர், தனியார் நிறுவனத்திற்கு தனது சொத்தை விற்றார். இதனால் பட்டா அந்த நிறுவனத்தின் பெயருக்கு மாறியது. ஆனால் அதே சொத்தை அவரது மகன்கள் வேறு ஒருவருக்கு விற்றனர்.
பட்டா தனியார் நிறுவனத்தின் பெயரில் இருக்கும்போது வேறு ஒருவருக்கு எப்படி பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்று பலத்த கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தாசில்தார் மணிகண்டன் மீது புகார் எழுந்த சூழ்நிலையில் தற்போது அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.