/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அதிகாரிகள் இன்றி பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை' வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆதங்கம்

ADDED : ஆக 07, 2024 05:30 AM
புதுச்சேரி : சட்டசபையில் விவாதம் நடக்கும்போது துறை அதிகாரிகள் இல்லாததால் நாம் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆதங்கப்பட்டார்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்களில் டிரைவர்கள் இல்லை என, கூறினார். அதற்கு, பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பல மாதம் சம்பளம் கிடைக்காமல் உள்ளது. அவர்களை ஒரு முறை தளர்வு அளித்து பணி நிரந்தரம் செய்து, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணி அமர்த்தலாம் என கூறினார்.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ.: சுகாதாரத்துறை சம்பந்தமாக பேசும்போது அத்துறையின் செயலர், இயக்குநர் யாரும் சபையில் இல்லை. நாம் பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: முதல்வர் அலுவலக அறையில் அமர்ந்து துறை செயலர்கள் கவனித்து வருகின்றனர்.
துணை சபாநாயகர் ராஜவேலு: துறை சம்பந்தமாக விவாதம் நடக்கும்போது துறை செயலர், இயக்குநர்கள் சபையில் இருக்க வேண்டும் என, ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.
நாக தியாகராஜன்: அதிகாரிகள் சபையில் இருக்க வேண்டும் என, ஒரு உத்தரவு போடுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: சட்டசபையில் போதிய அளவில் இடவசதி இல்லாததால் அமைச்சர் அலுவலகங்களில் அமர்ந்து விவாதங்களை கேட்டு வருகின்றனர் என, கூறினார்.