ADDED : ஏப் 13, 2024 04:39 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்காக, தேர்தல் பாதுகாப்பிற்கு 8 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக சிறப்பு காவல் பிரிவு போலீசார் புதுச்சேரி வந்தனர். இவர்கள் அந்தந்த பகுதி போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். லாஸ்பேட்டை போலீசாருடன் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு போலீசார் இணைந்து நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
எஸ்.பி., வீரவல்லவன், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு பெருமாள்சாமி தலைமையிலான நுாற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கருவடிக்குப்பம், காமராஜர் மணி மண்டபம், சாமிப்பிள்ளைத்தோட்டம், இடையஞ்சாவடி உள்ளிட்ட இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
