/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களை மிரட்டி பணம் பறித்த தமிழக எஸ்.ஐ., மகன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
/
மக்களை மிரட்டி பணம் பறித்த தமிழக எஸ்.ஐ., மகன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
மக்களை மிரட்டி பணம் பறித்த தமிழக எஸ்.ஐ., மகன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
மக்களை மிரட்டி பணம் பறித்த தமிழக எஸ்.ஐ., மகன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
ADDED : ஆக 15, 2024 04:42 AM

வில்லியனுார்: போலீஸ் எனக் கூறி பணம் பறித்த தமிழக எஸ்.ஐ.,யின் மகனை, புதுச்சேரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்த உளவாய்க்காலில் இயங்கிய போலி சாராய தொழிற்சாலையை சில மாதங்களுக்கு முன் உளுந்துார்பேட்டை மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்து, இதுதொடர்பாக அரும்பார்த்தபுரம் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், உளவாய்க்காலில் வசித்து வரும், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ராஜேந்திரனின் மகன் திலீபன்,35; தமிழக போலீஸ் எனக் கூறி, போலி சாராய தொழிற்சாலை வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேலின் உறவினரான ரமேஷிடம், உன்னையும் இவ்வழக்கில் சிக்க வைக்கப்போவதாகவும், அதில் இருந்து காப்பாற்ற ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்.
பயந்துபோன ரமேஷ், நகைகளை அடகு வைத்து ரூ.90 ஆயிரத்தை திலீபனிடம் கொடுத்தார். அடுத்த சில வாரங்களுக்கு பின் மீண்டும் திலீபன் ரூ.15 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், எஸ்.பி., வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திலீபன் தமிழக போலீஸ் எனக்கூறி, பலரை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வில்லியனுார் போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிந்து திலீபனை நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர் தமிழக போலீசில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவர் வைத்திருந்த தமிழக போலீஸ் சீருடை, போலி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து திலீபனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.