/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக சிறப்பு படை போலீஸ் புதுச்சேரிக்கு வருகை
/
தமிழக சிறப்பு படை போலீஸ் புதுச்சேரிக்கு வருகை
ADDED : ஏப் 12, 2024 04:33 AM

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் வந்துள்ளனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வினியோகம் தடுப்பதிற்காகவும் தேர்தல் துறை, துணை ராணும் மற்றும் உள்ளூர் போலீசார் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
இதற்காக வெளிமாநிலத்தில் இருந்து 6 கம்பெனி துணை ராணுவம் புதுச்சேரிக்கு வந்துள்ளது. இதுதவிர தற்போது தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் 90 பேர் புதுச்சேரி வந்தனர்.
கோரிமேட்டில் தன்வந்திரி நகர் போலீசாருடன், தமிழக சிறப்புபடை போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் காமராஜர் நகர், பிரியதர்ஷினி நகர், இஸ்ரவேல் நகர், கதிர்காமம் உள்ளிட்ட இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

