/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் பட்டயப் படிப்பு 19ம் தேதி நேரடி சேர்க்கை
/
ஆசிரியர் பட்டயப் படிப்பு 19ம் தேதி நேரடி சேர்க்கை
ADDED : ஆக 15, 2024 04:51 AM
புதுச்சேரி: மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி படிப்பில், சேர வரும் 19ம் தேதி நேரடி சேர்க்கை நடக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
லாஸ்பேட்டையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது.
இந்த பயிற்சி நிறுவனத்தில், தொடக்க கல்வி பட்டயப் படிப்புக்கு 34 இடங்கள் உள்ளது. இந்த படிப்புக்கு நேரடி சேர்க்கை வரும் 19ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த பட்டயப்படிப்பில் சேர பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.
சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்கள் அதனுடன் நகல் மற்றும் புகைப்படம் எடுத்து வரவும். பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
அதில், புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.